சென்னை:

திமுகவின் அதிருப்தி 3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று  கமலஹாசன் ‘பளிச்’சென்று பதில் அளித்தார்.

4தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் நிலையில், இன்று ஓட்டப் பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய தூத்துக்குடி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  ‘இன்று உலக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தினம். அதற்கு முதலில் வாழ்த்துக்கள். என்று தெரிவித்தவர், நான் சிறு பத்திரிகை ஒன்றை நடத்தி வந்துள்ளேன் என்று நினைவு கூர்ந்தார்.

நான் இப்போது 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக புறப்பட்டு இருக்கிறேன். இந்த பிரசாரமும், ஏற்கனவே நடைபெற்ற முந்தைய பிரசாரம் போல  வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், எங்கள் கட்சிக்கு இந்த தேர்தலில்  இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும்,  4 தொகுதிகளுக்கான தேர்தலிலும் அது தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர், சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், அது அ.தி.மு.க.வுக்குள் இருக்கும் உள்பூசல்கள். நமக்கு தேவையில்லாதது என்று பளிச்சென்று கூறினார்.

இருந்தாலும் செய்தியாளர்கள் விடாமல்,  சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு கொடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர்கள் கொண்டு வரலாம்…  இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.