வாஷிங்டன்:

கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், ‘‘இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். விண்வெளி துறைக்கு எண்ணற்ற பணிகளை ஆற்றியுள்ளார். அவர் அமெரிக்காவின் ஹீரோ. லட்சகணக்கான அமெரிக்க பெண்களுக்கு சாவ்லா முன்னுதாரணம். அவரின் தைரியம், ஆர்வம் அமெரிக்க பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிறது’’ என்றார்.

2003ம் ஆண்டில் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்ற கல்பனா சாவ்லா விண்கலம் வெடித்து உயிரிழந்தார். அவருடன் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.