சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்த கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.

வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CB-CID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டோரை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தவறான தகவல் பரப்பும் யூடியூப் சேனல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக ஊடகங்களில் இணை விசாரணை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, பள்ளியின் விடுதியில் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இநத விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் அண்டையில் உள்ள கிராமங்களுகும் பரவி, நேற்று மாபெரும் வன்முறை களமாக மாறியது. இதையடுத்தே, காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மகள் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு சென்றோம். மகள் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் சக மாணவிகளை பார்ப்பதற்காக சென்ற எங்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. உடலின் பல இடங்களில் காயங்கள் உள்ளன. முதலில் நடந்த பிரேதப் பரிசோதனையின்போது, உடன் இருக்க எங்களை அனுமதிக்கவில்லை. எனவே, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவும், சந்தேக மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரவும், நாங்கள் தெரிவிக்கும் மருத்துவர் குழுவால், உடலை மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டு தலின்படி பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்படவில்லை. எனவே, மறு பிரேதப் பரிசோதனைக்கும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும் எனஅதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, அறிக்கை  ஆகியவை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சின்னசேலத்தில் திடீர் கோபத்தால் வெடித்த வன்முறை அல்ல; திட்டமிட்ட சம்பவம் என  நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார். சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவர்களின் டி.சி.யை எரிக்க யார் உரிமை தந்தது? என கேள்வி எழுப்பப்பட்டது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.