டில்லி:
மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவில் உள்ள  இரண்டு பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு  இன்று மனுத்தாக்கல் செய்தது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைதாகமல் இருப்பதற்காக சன் குழும அதிபர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

கலாநிதி மாறன் - தயாநிதி மாறன்
கலாநிதி மாறன் – தயாநிதி மாறன்

இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது யாருக்கும் முன்ஜாமீன் தரக் கூடாது என்று அமலாக்கப் பிரிவு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.   இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இன்று நடந்த விசாரணையில் கலாநிதி, காவேரி, தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதற்கிடையே டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு மனுவை தாக்கல் செய்தது.  அதில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய மேக்சிஸ் நிறுவன அதிகாரிகள்  இருவருக்கு, நான்கு முறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் அழர்கள்  ஆஜராகவில்லை. ஆகவே, அவர்கள் இருவருக்கும் பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.