சென்னை:  கலைஞர் பெயரில்  பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாமக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய நிலையில்,  அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பெயரில்   பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்றார்.

வை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று  வியாழக்கிழமை (ஏப். 24) உயா்கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.  .இன்று காலை 9.30 மணிக்கு அவை  கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படும். இதன் தொடா்ச்சியாக, அவற்றுக்கு அமைச்சா் கோவி செழியன், அன்பில் மகேஷ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.

இதற்கிடையில்,  கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்  பாமக சட்டமன்ற  கட்சி தலைவர்  ஜி.கே. மணி  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது,  காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ளன,

நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேபோல் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை.  கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம் என்றார்.

 அரசியல் ரீதியாக தி.மு.க. – பா.ம.க. இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் கலைஞர் பேரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கோருகிறோம்.  கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.  கலைஞர் பெயரில் பல்கலை. அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  : கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால்,   கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

 மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர்  என்று கூறியதுடன்,   தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர் என்றும்,  பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர் என புகழாரம் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும்,  கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.  கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.