ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல மொழிப்படங்களும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், பெரிய நடிகர்கள், ’வெப்’ தொடர்கள் மற்றும் ’வெப்’ சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர்.
அவர்களில் இந்தி நடிகை கஜோலும் ஒருவர்.
நெட்பிளிக்ஸ் தயாரித்த ‘திரிபங்கா’ என்ற வெப் சினிமாவில் அவர் நடித்துள்ளார்.
நெட்பிளிக்சுடன் இணைந்து கஜோலின் கணவர் அஜய் தேவ் கான், இந்த படத்தை தயாரித்துள்ளார்.
வரும் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த சினிமாவின் ‘டீசர்’ புத்தாண்டை யொட்டி வெளியிடப்பட்டது.
ஒடிசி நாட்டியக்கலைஞராக கஜோல், தோன்றும் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.
ஒரே தலைமுறையின் மூன்று பெண்கள் பற்றிய கதை இது. ரேணுகா ஷகானா டைரக்டு செய்துள்ளார்.
1980 களில் முதல் தலைமுறை பெண்ணுடன் ஆரம்பிக்கும் கதை, மூன்றாவது பெண்ணின் கதையுடன் நிறைவடைகிறது.
– பா. பாரதி