லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி மற்றுமு நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக.வை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தள் (ஆர்எல்டி) துணைத் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கைரானா தொகுதியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தபசும் ஹசன் ஆர்எல்டி வேட்பாளராக கைரானா தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூர்பூர் தொகுதியில் நியாம் உல் ஹசன் ஆர்எல்டி, சமாஜ்வாடி ஆதரவுடன் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த கோராக்பூர், புல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.