லக்னோ:
சமீபத்தில் நடைபெற்ற உ.பி. மாநில இடைத்தேர்தல்களில் பாரதியஜனதா கடுமையான சரிவை சந்தித்தது. அங்குள்ள கைரானா மக்களவை தொகுதி உள்பட 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் படுதோல்வி பிம் ஆர்மி அமைப்பின் செயல்பாடுகளே காரணம் என்று பாரதியஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 28ந்தேதி நாடு முழுவதும் 10 சட்டமன்ற தொகுதிகள், 4 லோக் சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று, கடந்த 31ந்தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தல்களில் பாரதியஜனதா கடுமையான சரிவை சந்தித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாரதியஜனதா படுதோல்வி அடைந்தது. இது பாஜ தலைவர்களி டையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.யில் தொடர்ந்து நடைபெற்று வரும் தலித்கள் மீதான தாக்குதல்கள், பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை காரணமாக அங்குள்ள மக்கள் ஆளும் பாஜ அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற தலீத்கள் மீதான தாக்குதல்களும் பாஜ தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த பீம் ஆர்மி அமைப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தலித் ஓட்டுக்களை ஒன்றிணைத்து, அணி அணி திரட்டியதே பாரதிய ஜனதா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக என்று ஆர்எஸ்எஸ், பாஜ தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கைரானா தொகுதியில் மற்ற தொகுதிகளை விட 2 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்தாகவும், இந்த வாக்குகள் பதிவுக்கு முக்கிய காரணம் பீம்ஆர்மி அமைப்பு என்றும், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், அனைத்தும், தேர்தலுக்கு முன்பே அங்குள்ள தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை ஒன்றிணைத்து பாரதிய ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டியதாகவும், அதுபோல, வாக்குப் பதிவு அன்றும், அனைவரையும் வாக்களிக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பாரதியஜனதா படுதோல்வி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
உ.பி.யில் உள்ள கைரானா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் அபார வெற்றி பெற்றார். அதுபோல, நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலி சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 2 தொகுதிகளிலும் பாரதியஜனதா தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.