புதுச்சேரி

இன்று புதுச்சேரி ஆளுநராக கைலாசநாதன் பதவி ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது.

புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் புதுசேரி புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். நேற்று மதியம் 12 மணியளவில் புதுச்சேரிக்கு வந்த புதிய ஆளுநர் கைலாசநாதனை முதல்வர் ரங்கசாமி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று ஆளுநர் மாளிகையில் புதுச்சேரியின் 25வது கவர்னராக கைலாசநாதன் பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கைலாசநாதனுக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.