அரியலூர்: வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெடி குருவின் மகன் கனலரசன் நேற்று மாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ குரு.  மறைவுக்குப் பின்னர் , பாமக தலைவர் ராமதாஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் காடுவெட்டி குருவின் குடும்பத்தினர், தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

அவரது மகன் கனல் அரசு, ‘மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று  (14/02/2021) கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அந்த பகுதிக்கு வந்த கனல்அரசை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கொடியேற்று விழா தொடர்பாக காவல்துறையில் உரிய முன் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்திற்காகவும், அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாக  அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.