இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல்.

இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு.

நடிகர் பாபு அதன்பிறகு தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

அதிலும் அவரது தாய் தந்தை சமீபத்தில் மரணமடைந்துள்ளனர் .இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளான அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படத்தை சிலர் எடுத்து வெளியிட, திரைத்துறையில் இருந்து அபி சரவணன் போன்ற சிலர் அவருக்கு உதவி செய்துள்ளனர்.

ஆனாலும் ஊரடங்குக்கு பிறகு அவரது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் சாலையில் இருக்கும் ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.