விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் இம்மாதம் 11 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று கூறிவந்த நிலையில் இது ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபு, டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

இரண்டு கதாநாயகிகள் ஒரே ஹீரோ-வை காதலிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை 2-2-2022 ஆன இன்று 2:22 நிமிடத்திற்கு அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

[youtube-feed feed=1]