டில்லி:

நாடு முழுவதும்  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி தேசிய அளவில்  12வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் முதல் 50 இடங்களில் ஒரு இடத்தை பிடித்த மாணவியும் அவரே.

இந்த தேசியஅளவிலான முதலிடத்தை கல்பனா குமாரி என்ற மாணவி பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 99.99 சதவிகித மதிப்பெண்றுள்ளார்.

இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்ணும், வேதியியலில் 180க்கு 160 மதிப்பெண்ணும், உயிரியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்ணான 720க்கு 691 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் 13 லட்சம் பேர்  எழுதிய நீட் தேர்வு முடிவு இன்று மதியம் வெளியானது. இதில் 7 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வை  தமிழகத்தில் இருந்து தமிழகத்தில் இருந்து 1லட்சத்து 14 ஆயிரத்துக்கு 602 பேர் எழுதிய நிலையில், 45,338  பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணவி கே.கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.