கொழும்பு:
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சித் தலைவர் திசநாயகேவும், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கையின் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) அல்லது மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஜேவிபி கட்சித் தலைவர் அனுரா குமார திசாநாயகா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கோத்தபய ராஜபக்ஷேவை எதிர்த்து அனுரா குமார திசாநாயகா களமிறக்கப்பட்டு உள்ளதால் அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதே வேளையில் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) தலைமையிலான கூட்டணி இன்னும் அதன் வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட வில்லை. இந்த கட்சி சார்பில் யார் பெயர் அறிவிக்கப்பட உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.வி.பி தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியில், ஜே.வி.பி பிரதான கட்சிகளான யு.என்.பி, இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) மற்றும் எஸ்.எல்.பி.பி கூட்டணி சமீபத்தில் அங்கு நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத நிலையில், சட்டமன்றத்தில் அரசுக்கு ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பை காட்டி வருகிறது. ஊழல் போன்றவைகளை சுட்டிக்காட்டி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினையின்போது, தேசிய மக்கள் சக்தி’ கூட்டணி, தமிழ் தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, சிறிசேனாவில் அரசியல் சாசனத்துக்கு எதிராக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவின் நியமனத்தை பறித்தனர். இது தொடர்பாக திசநாயகாவின் பேச்சு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மக்களின் பரந்த கவனத்தை ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கடற்கரை கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திசநாயகேவின் வயது 50. தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் இவர்தான் இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.