ட்டாவா

னடாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என  அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார்.

தற்போது கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.  இந்த கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.  இந்நாட்டின் பிரதமராக ஜஸ்டின் டுரூடோ பதவி ஏற்றார்/  ஆனால் கடந்த 2019 ஆண்டு நடந்த  தேர்தலில் ஜஸ்டின் மீண்டும் ஆட்சியை பிடித்த போதிலும் பெரும்பான்மையைப் பெறவில்லை

இதையொட்டி பல முக்கிய சட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடத்தால்  மட்டுமே இயற்ற முடியும் என்னும் நிலை தொடர்ந்து வந்தது.  அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக நடக்க தொடங்கின.  இது ஜஸ்டின் டுரூடொவுக்கு மிகவும் அவஸ்தையை அளித்துள்ளது.

நேற்று ஜஸ்டின் டுரூடோ அந்நாட்டின் கவர்னர் ஜெனரலை சந்தித்துள்ளார். அப்போது அவர் ஆட்சியைக் கலைக்க உத்தரவிடும்படியும் முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு வருடம் ஆட்சிக் காலம் மீதமுள்ள நிலையில் ஜஸ்டின் டுரூடோ இண்டஹ் முடிவை எடுத்துள்ளது உலக அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.