காசியாபாத்

தரசாவில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து நெட்டிசன்கள் ஒரு ஹேஷ்டாக் # அமைத்து கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.

கிழக்கு டில்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் கடைவீதிக்கு சென்றுள்ளார்.  அங்கு அந்தச் சிறுமி காணாமல் போனார்.   அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.     கண்காணிப்பு காமிரா பதிவின் மூலம் அந்தப் பெண்ணை ஒரு ஆண் அழைத்துச் செல்வது தெரிந்தது.  அந்தச் சிறுமியின் பெயர் கீதா என கூறப்படுகிறது

அதன் பிறகு காவல்துறை அந்த ஆண் ஒரு மதராசாவில் கல்வி பயிலும் மாணவன் என்பதை கண்டறிந்தது.   அந்த மதரசாவில் அவருடன் இருந்த கடத்தப்பட்ட  சிறுமி மீட்கப்பட்டார்.    மருத்துவப் பரிசோதனையில் அந்த 17 வயதான ஆண் சிறுமியை பாலியல்  பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.  அந்த 17 வயதான ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.   இது குறித்து நீதிபதியிடம் அந்த சிறுமி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இது குறித்து கடும் நடவைக்கை எடுக்கக் கோரி காசிப்பூரில் ஒரு பேரணி நடைபெற்றது.   அந்தப் பேரணியில் பலாத்காரம் செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய சிறுமி முகத்தை மறைத்தபடி கலந்துக் கொண்டார்.   இந்த விவரம் வெளியானதும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பல நெட்டிசன்கள் களம் இறங்கி உள்ளனர்.

ஏற்கனவே கத்துவா பகுதியில் ஒரு சிறுமி கோவிலில் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த தகவலில் கடும் சர்ச்சை ஏற்பட்டது தெரிந்ததே.  தற்போது இந்த விவகாரத்திலும் நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  பலரும் இதற்காக புதிய ஹேஷ்டாக் # ஒன்றை பதிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #JusticeForGeeta என்னும் ஹேஷ்டாக் வைரலாகி வருகிறது.