டில்லி

சிதம்பரத்தின்  முன் ஜாமீன் அவசர வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி குறித்த தகவல்கள் வந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது ஐ என் எக்ஸ் ஊடகத்துக்குச் சலுகை அளித்து உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதற்கு உதவி புரிந்ததாக அவர் மகன் கார்த்தி சிதம்பரம் மீது  எழுந்த குற்றச்சாட்டில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.   இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ப சிதம்பரம் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் அளிக்கக் கோரி அவசர மனு ஒன்று அளிக்கப்பட்டது.  அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்துள்ளார்.    அதை ஒட்டி சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிபதி ரமணா குறித்த தக்வலகள் வெளியாகி உள்ளன.  கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று ஒரு பொருளாதார வழக்கில் உயரீதிமன்ற உத்தரவைத் தடை செய்யுமாறு வாய் மொழி கோரிக்கை விடப்பட்டது.   அந்த உத்தரவை நீதிபதி ரமணா தடை செய்துள்ளார்.    ஆனால் ப சிதம்பரம் வழக்கில் நேர்மாறாக  நடந்துக் கொண்டுள்ளார்.

இதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நீதி பரிபாலன லட்சணம் எனப் பிரபல ஊடக பதிவாளர் சவுக்கு சங்கர் பதிந்துள்ளார்.