சென்னை:

ளி, காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள், சமூகநல அமைப்புகள் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று  சோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில், சளி, காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள்,  நீதிமன்றத்திற்குள் நுழைய வேண்டாம் என்றும், குறிப்பாக, தனது நீதிமன்ற மண்டபத்தின் எண் 35 க்குள் நுழைய வேண்டாம் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மார்ச் 31 வரை ‘பணிநீக்கம்’ என்ற தலைப்பில் எந்த வழக்கும் வெளியிடப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.