புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம் செய்யப்படுவதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அனுமதித்துள்ளார். இவர் உச்சநீதிமனற்த்தின் 48வது தலைமை நீதிபதியாவார்.
தற்போதைய சி.ஜே.ஐ., எஸ்.ஏ.போப்டேயின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரமணா 2021 ஏப்ரல் 24 பதவி ஏற்பார் என்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வெயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் 16 மாதங்கள் மட்டுமே.