Justice Leila Seth, first woman judge of Delhi High Court, dies at 86
டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான லீலா சேத் காலமானார். அவருக்கு வயது 86. நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த லீலா சேத், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலமானார்.
லக்னோவில் 1930ஆம் ஆண்டு பிறந்த லீலா சேத், 1958ம் ஆண்டு லண்டன் சட்டத்தேர்வை எழுதி முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். 1959ஆம் ஆண்டு முதல் பார்கவுன்சிலில் இணைந்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
தொடக்கத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த லீலா சேத் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1978ஆம் ஆண்டு பதவியேற்றார்.இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 1991ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 1997 – 2000ஆம் ஆண்டில் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்துப் பெண்களுக்கான சொத்துரிமை குறித்த சட்டத்திருத்தம், சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி லீலா சேத் தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானம் செய்துள்ளார்.