டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, அவர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை காலை 10:36 மணிக்கு நீதிமன்றத்தில் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற அறை-1ல் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) டி ஒய் சந்திரசூட் தீபகங்கர் தத்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி தத்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
பிப்ரவரி 9, 1965 இல் பிறந்த நீதிபதி தத்தா இந்த ஆண்டு 57 வயதை எட்டினார் மற்றும் பிப்ரவரி 8, 2030 வரை பதவியில் இருப்பார். உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெறும் வயது 65 ஆகும். இவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, மறைந்த சலில் குமார் தத்தாவின் மகன் என்பதுடன், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த நீதிபதி அமிதவ ராயின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.