டில்லி

இந்தியாவின் தலைநகர் டில்லி அருகே தலைமுறை  தலைமுறையாக   பெண்களை  விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூகப்பழக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டில்லி புறநகரில் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தின் பெண்கள் தங்கள் கணவன், பிள்ளைகள் சுகமாக வாழவேண்டும் என்பதற்காக குடும்ப சம்மதத்துடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தச் சமூகத்துப் பெண்கள், அவர்களின் கணவன், மாமா, அத்தை மட்டுமல்ல சிலநேரங்களில் பெற்றோர்களின் சம்மதத்துடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதுதான். அதுவும் பல தலைமுறைகளாக நடந்துவருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதிகாலை 2 மணிதான் இவர்களது அலுவலக நேரம். அந்த இரவு முழுவதும்  5 கஸ்டமர்கள் வந்தால்தான் மறுநாள் அவர்களது குடும்பம் நடக்கும். இதற்கிடையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் அவர்கள் தரும் பாலியல் தொல்லைகளை தாங்கமுடியாது, அதுமட்டுமல்ல தன் சம்பாத்தியம் அனைத்தையும் பிடுங்கிச் சென்று விடுவார்கள் என்கிறார் ராணி என்கிற பெண். காலை 7 மணிக்கு அலுவலை முடித்துக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.

கணவன் உங்களை விபச்சாரத்துக்கு உட்படுத்தும்போது உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு, இது இங்கே சர்வசாதாரணமான நிகழ்வு, தன் குடும்பத்துக்காக சம்பாதிப்பதாக தெரிவித்தார். இது இங்குள்ள எல்லாப் பெண்களுக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான் என்கிறார் ஹோர்பாய் என்கிற பெண்.                                                                                 

தையல்தொழில் கற்று சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகவும்,  தனது  பெற்றோர் இறந்ததும்  கணவனே தன்னை  மாமா வேலை பார்த்து விபச்சாரத்தில் உட்படுத்தியதாகவும் அந்தப் பெண் கூறுகிறார்.

தன் கணவன் இப்போது இறந்துவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவள்,  ஒருவேளை கணவன் உயிருடன் இருந்திருந்தால் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பியிருக்கமுடியாது என்றார்.

இந்தச் சமூகத்தின் இன்றைய தலைமுறைப் பெண்கள் தங்கள் பெண் குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

டில்லியில் பாலியல் வன்புணர்ச்சி நடந்தால் நரம்பு புடைக்கபேசும் நாம், தினம்தினம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படும் இந்தப்பெண்கள் குறித்து எதுவும்  பேசுவதில்லை…என்று பிடிவாதமாய் இருப்பது கேவலமான செயல்.