சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்  தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற  இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக  திடீரென அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டை தொடர்ந்து, அதில், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத் துறை செய்தி வெளியிட்டிருந்தது.  இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் திமுக அரசையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சனம் செய்தன. பாஜக தரப்பில் பல்வேறு அதிரடி போராட்டங்களும் நடத்தப்பட்டது. இதனால், இந்த ஊழல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

இதற்கிடையில்,  அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில்,  அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை இன்னும் முறையாக வழக்கு பதிவு செய்யாத நிலையில், நீதிபதிகளின் உத்தரவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் ஒருவரான செந்தில்குமார், முன்னாள் திமுக நிர்வாகியின் மகன் என்பதும், பல்வேறு வழக்குகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதுவும் பேசும்பொருளாக மாறியது.

இந்த நிலையில், டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் இருந்து விசாரணை நடத்திய  து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.

டாஸ்மாக ரெய்டு தொடர்பான ஆவணங்களை தாக்கல் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் விலகியுள்ளனர். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.