டெல்லி: இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ஜூன் 4 மோடி விடுவிக்கப்பட்ட தினம் என கூறியுள்ளது.
“மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது” என விமர்சித்து உள்ளது. மேலும், ஜூன் 4 ‘மோடி முக்தி திவாஸ்’ ஆக மாறும் என்றும் சாடியுள்ளது.
ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோதி இக்கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி ஆண்டுதோறும், ஜுன் 25ந்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.
இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
“மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது” என காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது. “இந்தப் பிரதமரின் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு, அதன் தத்துவங்கள், விழுமியங்கள் மற்றும் நிறுவனங்களின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 10 வருடங்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கிய 2024 ஜூன் 4-ந்தேதி வரலாற்றில் மோடி விடுவிக்கப்பட்ட தினம், அதாவது ஜூன் 4 ‘மோடி முக்தி திவாஸ்’ ஆக மாறும் என தெரிவித்துள்ளார்.
ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும்! மத்திய அரசு அறிவிப்பு…