மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி – சோனியா காந்தியின் தவப்புதல்வரான ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாள் இன்று.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான, இளந்தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரனும், . முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் என்ற பெருமையும் பெற்றவர்.
ராகுல்காந்தி 1970ம் ஆண்டு ஜூன் 19ந்தேதி டெல்லியில் பிற்ந்தார். இவர் தனது தொடக்ககல்வியை டெல்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பின்னர் டேராடூனிலும் பயின்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ப்ளோரிடாவின் லோரின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரைனிடி கல்லூரியில் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் எம்.பில் பட்டம் முடித்தார்.
1991ல் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ளோரிடாவின் ரோலின்ஸ் கல்லூரியில் ரவுல் வின்சி எனும் புனைப்பெயரில் இளங்கலை பட்டம் பயின்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, லண்டனில் உள்ள மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான மானிட்டர் குரூப்பில் பணியாற்றியவர் ராகுல்காந்தி.
2002 மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பேக்ஆப்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடேட்-ல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட், சஞ்சய் காந்தி மெமோரி யல் டிரஸ்ட் மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் டிரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து சமூகசேவைகளில் ஈடுபட்டுவருகிறார். உத்திரபிரதேசத்தில் லாபநோக்கில்லா கண் சிகிச்சை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2004ல் தனது அரசியல் வாழ்வை துவங்கிய ராகுல், தனது தந்தையின் தொகுதியான உத்திரபிர தேசத்தின் அமேதியில் முதல்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் முதன்முதலாக நுழைந்தார்.
2007ம் ஆண்டு செப்டம்பர் 24ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2009 நாடாளுமன்ற தேர்தலின் போது, வெறும் ஆறே வாரங்களில் நாடுமுழுவதும் 125 பேரணிகளை நடத்தி சாதனை படைத்தவர்.
2012 உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். 2 மாதங்களில் 200 பேரணிகள் நடத்தி பெரும் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார்.
2013ம் ஆண்டு ஜனவரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014ம் ஆண்டு மீண்டும் 16வது மக்களவைக்கு தேர்வான ராகுல், வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு, நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு போன்றவற்றின் உறுப்பினரானார்.
2017- ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரப்பணியாற்றினார். இளந்தலைவர் அன்று அன்போடு அழைக்கப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
ஆனால், 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி 2 இடங்களில் போட்டியிட்ட நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்ற எம்.பி.யானார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என பகிரங்கமாக பேசி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு நான் விசுவாசமுள்ள தொண்டன் மற்றும் இந்தியத் தாய்க்கு பற்று மிக்க மகன். இந்தியாவை காக்கவும், இந்தியாவுக்கும் தொண்டாற்றவும் என் இறுதி மூச்சு வரை படுபாடுவேன். இந்த நாட்டின் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி தலைவராக இருந்தபோது தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த பாஜகவை புறமுதுகிட்டு ஓடவிட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது என்பதும் வரலாற்று சாதனை.
இளந்தலைவர் ராகுல்காந்தி பல்லாண்டு வாழ பத்திரிகை டாட் காம் இணையதளமும் வாழ்த்துகிறது..