சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும்  என  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கான குரூப்4  தேர்வு ஜூலை 12ந்தேதி நடைபெறும் என்றும், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பங்கள் பதிவு செய்ய கடைசி நாள் மே மாதம் 24 ஆம் தேதி என்றும்  டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிசி தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.