பெங்களூரு

பெங்களூரு நீதிமன்றம் பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது.

ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியும்m முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல்  பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றசாட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது  இதுதொடர்பாக பல பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று பிரஜ்வல் ரேவண்ணாவை மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் கர்நாடக உயர்நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.