மும்பை:

நீதிபதி லோயா மர்ம மரண விசாரணையை உச்சநீதிமன்றம் மறுத்தது மூலம் இனியும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நீதிபதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த வந்த சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாக மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பது. இதை நிராகரித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிபதி லோயாவின் சகோதரி அனுராதா பியானி கூறுகையில், ‘‘எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் கடந்த 4 ஆண்டுகளாக எதுவும் பேசாமல் இருந்தோம்’’என்றார்.

நீதிபதியின் உறவினர் சீனிவாஸ் லோயா கூறுகையில்,‘‘இந்த தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மரண விவகாரத்தில் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை’’ என்றார்.