சினிமா பிரபலங்கள், திரைப்படத்தில் நடிப்பதை விட, தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கு அதிக ஊதியம் பெறுவது தெரிந்த விஷயம்.

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், இதற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

ஜெமினி டி.வி.யில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் மூன்று பாகங்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். அவருக்கு நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

நான்காம் பாகத்தை வழங்கிய சிரஞ்சீவிக்கு 9 கோடி ரூபாய் சம்பளம்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இப்போது, ஜுனியர் என்..டி.ஆர். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக அவருக்கு ஏழரை கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

ஜுனியர் என்.டி.ஆர். ஏற்கனவே பிகபாஸ் நிகழ்ச்சி மூலம் டி.வி. யில் நுழைந்து கலக்கியது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி

[youtube-feed feed=1]