மூக ஊடகங்கள் வந்ததில் இருந்து, எந்தவொரு விசயத்தையும் தெரிந்துகொள்ளாமலேயே கருத்தைப் பகிர்வது அதிகமாகிவிட்டது.

நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்த குடும்பத்தினரை காப்பாற்றாமல் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக பத்திரிகையாளர்கள் மீது சமூகவலைதளங்களில் பலரும் குற்றம் சுமத்தினார்கள்.

ஒரு தகவல் தெரியாத நிலையில் கருத்திடுவது கூட பரவாயில்லை. ஆனால் இதைக் காரணமாக வைத்த, பத்திரிகயாளர்களை மிகவும் தரம் தாழ்ந்து கொச்சையாக எழுதியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. குறிப்பிட்ட தீக்குளிப்பு கொடூரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில பத்திரிகையாளர்கள் படம், வீடியோ எடுத்தனர். வேறு சில பத்திரிகையாளர்கள் தீயை அணைக்க போராடினர். படம், வீடியோ எடுத்த பத்திரிகையாளர்களும் பிறகு தீயை அணைக்க உதவினர்.

அதோடு தீக்குளித்தவர்களை, கைத்தாங்கலாக வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை செல்லவும் உதவினர்.

இதை இங்கிருக்கும் படங்கள் சொல்லும்.

இதை அறியாமல் வழக்கம்போல, சிலர் அருவெறுப்பான வார்த்தைகளில் ஏசியதுதான் வருத்தமான விசயம்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை சமூகவலைதள பதிவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ..?

[youtube-feed feed=1]