
பிந்த்: ஜோதிராதித்யா சிந்தியாவை, மோடி மற்றும் அமித்ஷாவுடன் இணைத்து பேனர் வைத்து கலகலப்பாக்கியுள்ளார் மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா பிரமுகர் ஒருவர்.
காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த மத்தியப் பிரதேசத்தின் ஜோதிராதித்யா சிந்தியா, சமீபத்தில் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், ‘மோடி அரசின் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை ஆதரித்த பாரத மாதாவின் மகன் ஜோதிராதித்யா சிந்தியா” என்ற வாசகங்களுடன் கூடிய பேனர், அவரை வரவேற்று வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியுடன் பின்னிப் பிணைந்து அறியப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, தற்போது முதன்முதலாக பாரதீய ஜனதாவின் பேனரில் தோன்றுவது பலருக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது.
ஜோதிராதித்யா சிந்தியா, நேற்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு, மத்தியப் பிரதேச மாநில அளவில் அல்லது தேசிய அளவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]