இந்த ஐ.பி.எல்.-2016 போட்டித்தொடருக்கு ஹர்ஷா போக்லே வர்ணணையாளராகத் தேர்வுச் செய்யப் படவில்லை. இதற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதற்கு அமிதாப்பட்சன் மற்றும் தோனி தான் காரணம் எனக் கூறப்படுகின்றது.
சென்ற ஐ.பி.எல் போட்டித் தொடர் வரை, சென்னை அணியில் இணைந்து விளையாடிய தோனியும் சுரேஸ் ரைனாவும் தற்பொழுது இரண்டு புதிய அணிகளின் தலைவராக உள்ளனர். தோனி பூனே அணிக்கும், ரைனா குஜராத் அணிக்கும் கேப்டனாக உள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று இவ்விரு அணிகளுக்கும் போட்டி நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் தோனி விக்கெட் கீப்பிங்க் பணியின் போது ஒரு ஸ்டம்பிங்க் செய்யும் வாய்ப்பைத் தவற விட்டார்.
அந்த புகைபடத்தை ட்விட்டரில் ” ஸ்டம்பிங்கை தவறவிட்ட தோனிக்கு இந்தப் போட்டி ஒரு மோசமான நாளா? ” என வினவி இருந்தார்.
தோனியை விமர்சித்த ஹர்ஷா போக்லேவை கிண்டலடித்த வர்ணனையாளர் ஜோனாதன் அக்னியு (இவர் இங்கிலாந்து கவுன்டி அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ).
“கவனமுடம் இருங்கள் போக்லே.. உங்களை டிவிட்டரில் இருந்தும் நீக்கிவிடுவார்கள் அவர்கள் (பி.சி.சி.ஐ)” எனக் கிண்டலடித்துள்ளார்.
இந்தப் பரிகாசம், உச்ச நீதிமன்றமே கட்டுப்படுத்த முடியாத, மர்மங்கள் நிறைந்த பி.சி.சி.ஐ. யின் நிர்வாகத்தின் அவலட்சணத்தைக் காட்டுவதாகவுள்ளது.
ஹர்ஷா போக்லே உலகளாவிய புகழ்பெற்ற வர்ணணையாளர். இவரை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.