சென்னை: மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என 3 மாவட்ட செயலாளர்கள் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின்போது கொள்கையை அடகுவைத்து திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வரும் கட்சிகளில் மதிமுகவும் ஒன்று. அதன் பொதுச்செய லாளராக இருக்கும் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸைபோல தனது குடும்பத்தினர் கட்சி பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த நிலையில், அவரது மகன் துரைவையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது, கட்சியின் மூத்த நிர்வாகிகளைடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதனால், மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இநத நிலையில், மதிமுகவை திமுக உடன் இணைப்பது குறித்து, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர்கள் சிவகங்கையில்  முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.