கவுகாத்தி:

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய வலியுறுத்தி அஸ்ஸாம் மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு 6 இடங்களில் அந்த அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ‘ஐஎஸ்என்இ’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘ஐஎஸ் வடகிழக்கு’ என்று இது பொருள்படுகிறது. ‘ஐஎஸ்.ல் இணையுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. கோல்பாரா மாவட்டத்தில் இருந்த இந்த இக்கொடிகள் குறித்து மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அப்புறப்படுத்தினர்.

இதைதொடர்ந்து நல்பாரி மாவட்டத்தில் மேலும் ஒரு கொடி இருந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்தனர். இதன் மூலம் உள்ளூரில் பயங்கரவாத அமைப்பு அடித்தளம் அமைக்க முயற்சி செய்கிறதோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து அஸ்ஸாம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.