ஜோ ரூட் இரட்டை சதம் விளாசல் – முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்த இங்கிலாந்து!

Must read

கொழும்பு: இலங்கை அணிக்கெதிரான காலே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் இலங்கையைவிட, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இப்போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் மொத்தம் 321 பந்துகளை சந்தித்து, 1 சிக்ஸர் & 18 பவுண்டரிகளுடன் 228 ரன்களை விளாசினார்.

டான் லாரன்ஸ் 73 ரன்களை அடித்தார். பேர்ஸ்டோவின் பங்கு 47 ரன்கள். ஜோஸ் பட்லர் 30 ரன்களை அடிக்க, இங்கிலாந்து அணி 117 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் தில்ருவான் பெராரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லசித் எம்பல்டெனியா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அசிதா பெர்னான்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

 

More articles

Latest article