வாஷிங்டன்: அமெரிக்காவில்  அதிபர் தேர்தல் களைகட்டி உள்ளது. முன்னாள் அதிபர் டிரம்ம் மீண்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயக கட்சி கட்சி வேட்பாளராக பைடனே மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பைடனுக்கு முன்னாள்அதிபர் ஒபாமா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதன் காரணமாக அதிபர் தேர்தல் போட்டியில், தற்போதைய துணைஅதிபரான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு அளித்துள்ளார்.

அதேவேளையில், அதிபர் பைடன், 2025 ஜனவரியில் தனது பதவிக்காலம் முடியும் வரை ஜனாதிபதியாக இருப்பார் என்றும், இந்த வார இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.

மீண்டும் அதிபர் தேர்தலில் களம் காணும் ஜோ பைடனுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது நடவடிக்கை மற்றும் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் பேசும் போது தடுமாறிய பைடன், அதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார். இதோடு துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்று அழைத்தார். இந்த சம்பவங்கள்  மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற காரணங்களால், பைடன் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும்  ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது  எக்ஸ் தள பதிவில், “ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்.” “இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.