வாஷிங்டன்: தனது பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளாதது நல்ல விஷயம் என, புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் அவரது வெற்றி ஏற்க மறுத்துடன், வாக்குப்பதிவில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினிர். இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவைகள் அனைத்தும் தள்ளுபடியான நிலையில், ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்ய அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழுக் கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள ‘கேப்பிட்டல்’ கட்டடத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட வீடியோ வைரலாகி, அவரது ஆதரவாளர்கள் கேப்பிடல் கட்டிடம் முன் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆர்ப்பாட்டக் காரர்கள் கட்டித்திற்குள் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தினர். வன்முறையை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. டிரம்பின் இந்த இழிசெயலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, ஜோ பைடன் வெற்றி பெற்றதாக பார்லிமென்ட் கூட்டுக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்தது. வரும், 20ல், அமெரிக்காவின், 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், கொரோனா பிரச்சனை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். எங்கள் அமைச்சரவையில் பெயர்களை அறிவித்து விட்டதில் பெருமிதம் கொள்கிறேன். ஆண்களைப் போலவே அதிகமான பெண்களைக் கொண்ட முதல் அமைச்சரவை இதுவாகும்.ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு தொடர்பான புதிய சட்டங்கள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்த ஹவுஸ் டெமக்ராட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.
ஜனவரி 20-ம் தேதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது அவரின் முடிவு, இது ஒரு நல்ல விஷயம் என தெரிவித்தார்.