வாஷிங்டன்
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நாளில் 1500 பேர் தண்டனையை குறைத்துள்ளார்.
அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்து19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். வெள்ளை மாளிகை இன்று இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுவதுடன் வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது.