பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்றதுடன் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக விடைபெறும் முன் ஜோ பைடன் தன்னை சந்தித்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் இடம்பெற்ற குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்த அமெரிக்க அதிகாரிகள் ரியோ கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்காக அனைத்து தலைவர்களும் வந்த நிலையில் ஜோ பைடனின் பயணத்தில் சில குளறுபடிகளால் அவர் வருவதற்கு முன் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெலோனி ஆகியோர் வருவதற்கு முன்பே அவர்கள் வராததை அறியாமல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
தவிர இவர்கள் வந்தபோது குழு புகைப்படம் எடுத்து முடிந்து பலரும் கிளம்பியதால் மூழுமையான குழு புகைப்படம் எடுக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.