வாஷிங்டன்

ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய போது கீழே விழுந்து அவர் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்க உள்ளார்.  இதையொட்டி நிர்வாக மாற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.   தற்போது 78 வயதாகும் ஜோ பைடன் ஒரு நாயை வளர்த்து வருகிறார்.

டைகர் எனப் பெயரிடப்பட்ட அந்த நாயுடன் வீட்டில் விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.   அதையொட்டி அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன.  அந்த சோதனையில் அவருக்குக் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முறிவு தீவிரமாவதைத் தவிர்க்க அவர் பல வாரங்களுக்கு பூட்ஸ் அணிய வேண்டியது அவசியமாகும்.   அதே வேளையில் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தடையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   பைடன் குணமடைய தற்போதைய அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.