ஜார்ஜியா
ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யும் ஜார்ஜியா மாநில தேர்தல் நடந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஜார்ஜியா மாநிலத்தில் செண்ட் சபை தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் ஜோ பைடனுக்கு பெரும்பான்மைக்கு இரு இடங்கள் தேவைப்படுகின்றன. மேலும் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள டிரம்ப்புக்கு மேலும் ஒரு இடம் இருந்தால் பெரும்பான்மைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்றைய வாக்கு எண்ணிக்கையில் மிகவும் குறைவான வித்தியாசம் இருந்தால் மேலும் சில நாட்கள் கழித்தே இறுதி முடிவு வெளியாகும். ஜார்ஜியாவில் இருந்து கெல்லி லியோஃபர் மற்ரும் டேவிட் பெர்டியு ஆகியோர் செனட் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ரஃபேல் வார்னாக் மற்ரும் ஜான் ஒசாஃப் ஆகியோர் போட்டி இடுகின்றனர். நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் 50% வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே தற்போது மீண்டும் வாக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்பதால் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.