நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 209 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.
முன்னதாக இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 131 வாக்குகளும், டிரம்ப் 108 வாக்குகளும் பெற்று முன்னணியில் இருந்து வந்தனர். பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது. இந்த நிலையில், காலை 9.30 மணி நிலவரப்படி, ஜொ பைடன் 209 வாக்குகள் பெற்று வெற்றிக்கனியை பறிக்கிறார். அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்று அமைதியாக முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ( வயது 77) போட்டியிடுகிறார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும், டிரம்ப் ஜோ பைடன் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு அதிபர் தேர்லில் வெற்றி 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 209 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து போராட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 118 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.