புதுவை: புதுச்சேரி மாநில பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் என்ற நிலைகளில் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மார்ச் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், கணக்காளர், செயலக உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணி நிலைகள் உள்ளன.

இளநிலை & முதுநிலைப் படிப்புகள், டிப்ளமோ, பி.இ., பி.டெக்., ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளை மேற்கொண்டோர் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருத்தல் வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலதிக விபரங்களை அறிய http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf என்ற வலைதளம் செல்லவும்.

[youtube-feed feed=1]