சென்னை: சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற  உள்ளது. இதில் சுமார் 20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாவட்டம் ஆட்சியர் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில்,  வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக தமிழக அரசு சார்பில் தனியார் நிறுவனங்களிள்ல பணி வாய்ப்பு கிடைக்கும் வகையில், அவ்வப்போது வேலைவாய்ப்பு வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில், வரும் 28ந்தேதி சென்னை சைதாப்பேட்டையில் பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில்,   20ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில் நிறுவங்கள் தொடங்கப்படுகிறது. இதன் காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதிலும் வெளியூரில் சென்று வேலைக்கு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர்  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.02.2026 அன்று சென்னை-15, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி. பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள். ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள். பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள். தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்,

வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு பயனடையுமாறு தனியார்துறையில் சென்னை பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி , https://forms.gle/x48Nu8uZAj3qF8Pc7 என்ற Google Link-லோ தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

[youtube-feed feed=1]