மும்பை
ஜியோ தனது 500 ரூ விலையுள்ள 4ஜி ஃபோனை இந்த மாத இறுதிக்குள் விற்கத் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் வருடாந்திரக் கூட்டம் ஜூலை 21ஆம் தேதி நடக்க உள்ளது. அது முடிந்த உடன், ஜியோவின் கனவுத்திட்டமான 500ரூ. க்கு 4ஜி ஃபோன் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. அத்துடன் ஜியோவின் தன் தனா தன் ஆஃபர் இன்னும் சில தினங்களில் முடியப் போவதால் புது கட்டண விகிதங்களும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அஃபிஷியல் பார்ட்னர் HSBC ஆகும்.
நாடு முழுவதும் சுமார் 1.8 – 2 கோடி ஃபோன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆர்டர்கள் ஏற்கனவே சீனாவின் புகழ் பெற்ற பல மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் தற்போது மாதத்துக்கு சுமார் ஐம்பது லட்சம் ஃபோன்கள் விற்பனை ஆவதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது.
பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு தொலைதொடர்பு அதிகாரி, ”ஜியோவின் தன் தனா தன் ஆஃபரை தவிர ரூ 150/- க்கு ஒரு திட்டமும், குறைந்த பட்சமாக 80-90ரூ. க்கு மற்றொரு திட்டமும் பரிசிலனையில் உள்ளது. இதன் மூலம் மற்ற நிறுவனங்களும் தங்களின் கட்டணங்களை குறைக்கும் நிலைக்கு நிச்சயமாக தள்ளப்படும்” என கூறினார்.