மும்பை: ஜியோ நிறுவனம், தனது மொபைல் சேவையில், ஒரு ஜிபி டேட்டாவிற்கான கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்தியுள்ளது. இதற்குமுன் ஜியோவில், 1 ஜிபி டேட்டா கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்பட்டது.
மேலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம்(டிராய்), இந்த விலை உயர்வு 6 மாதங்களுக்கு மேலான காலகட்டத்தில் படிப்படியானதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், ஜியோ சார்பாக திடீரென கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போதே, இலவசங்களை அதிகம் அனுபவித்து வந்த அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
மேலும், டேட்டா விலைகளுக்கான தள விலையையும் டிராய் அமைப்பிடம் கேட்டுள்ளது ஜியோ.
அதாவது, ஒரு ஜிபி டேட்டாவிற்கான விலையை ரூ.20 என்ற அளவிற்கு, வாடிக்கையாளர்கள் பெரியளவிலான சிரமத்தை உடனே உணராத வகையில், இரண்டு முதல் மூன்று கட்டங்களாக சிறிதுசிறிதாக அமல் செய்வதே இந்த தள விலை நிர்ணயமாகும். அதைத்தான், டிராய் அமைப்பிடம் கேட்டுள்ளது ஜியோ நிறுவனம்.