மும்பை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
ஜியோ நிறுவனம் தீபாவளி வரை கட்டணச்சலுகையும் பணம் திரும்ப அளிக்கும் திட்டமும் அறிமுகப் படுத்தி இருந்தது. அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுற்ற நிலையில் இன்று முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
நேற்று வரை ரூ.399க்கு 84 நாட்களுக்கு 89 ஜிபி வழங்கும் பிளானின் விலை ரூ. 459ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் ரூ.399 க்கு 70 நாட்களுக்கு 70 ஜிபி என்னும் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவச அழைப்புக்கள் மற்றும் குறும் செய்திகளுக்கு மாற்றம் ஏதும் இல்லை. இதே போல ரூ. 509 பிளானிலும் 56 நாட்களில் இருந்து 49 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.149க்கு 28 நாட்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டு வந்த 2 ஜிபி டேட்டா தற்போது 28 நாட்களுக்கு 4 ஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.