மும்பை:
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.
பவனின் திடீர் ராஜினாமா ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்மானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த செயல் ஜியோவை எதிர்க்கும் மற்ற நெட்வொர்க்களின் சூழ்ச்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் குரல் மற்றும் டேட்டா சேவைகளை செப்டம்பர் மாதம் முதல் அளித்துவருகிறது. அதுமட்டும் இல்லாமல் வைஃபை சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
2017 ஆண் ஆண்டு அரை இறுதிக்குள் 1 மில்லியன் வைஃபை சாதனங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பவன் யாதவ்.
ஜியோ வைஃபை சேவையை பவன் எஸ் யாதவ் தனது 18 முதல் 20 பேர் கொண்ட குழுவுடன் நாடு முழுவதும் செயல்படுத்தும் பணியைச் திறம்பட செய்து வந்தார்.
இதற்காக இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களிடம் ஜியோ நிறுவனம் தங்களது ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களுக்கான இணையதள சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இது மாதிரியான பொது வைஃபை திட்டங்களை செயல்படுத்துவதில் பவன் எஸ் யாதவ் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஜியோ நிறுவன தயாரிப்புகளை வைஃபை மூலமாகப் பிரபலப்படுத்துவது, வணிக செயல்முறைகள் மற்றும் செயலிகள் உருவாக்குவது போன்றவற்றிலும் உதவி செய்து வந்துள்ளார்.
பவனின் திடீர் ராஜினாமா குறித்து இதுவரை ஜியோ நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருடைய இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து ஜியோவின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் அல்லது ஐடியாவில் சேரலாம் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
courtesy: www.goodreturns.in