அசாம்:
உள்ளூர்வாசிகளுடன் பாரம்பரிய ஜுமூர் நடனமாடிய அசத்தினார் பிரியங்கா காந்தி.
அசாமில் மார்ச் 27 ம் தேதி வாக்களிப்பு தொடங்கி, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே பிபிஎஃப், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்), மூன்று இடது கட்சிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய அமைப்புடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரியங்கா இன்று காலை 2 நாள் பயணமாக அசாம் வந்தடைந்தார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு காமக்கியா கோவிலில் பிரார்த்தனை வழிபாடு செய்தார்.
இந்நிலையில், அஸ்ஸாமின் லக்கிம்பூரில் உள்ளூர்வாசிகளுடன் பாரம்பரிய ஜுமூர் நடனமாடி அசத்தினார்.
Patrikai.com official YouTube Channel