ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா – மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 2 பேர் பலியாகி உள்ள நிலையில், ஏராளமானோர்  காயமடைந்தனர். இதுதொடர்பான ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம்  சரதர்பூரில் ஹவுரா-மும்பை அஞ்சல் தடம் புரண்டதில் 2 பேர் பலி, 20 பேர் காயம் அடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ரயில்வே போலீசார் தெரிவித்த உள்ளனர்.  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை-ஹவுரா மெயிலின் 18 பெட்டிகள் ஜார்க்கண்டின் சரதர்பூர் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை தடம் புரண்டதால் ஐந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விபத்தில், இருவர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

சரக்கு ரயில் தடம் புரண்டு, எதிரே வந்த ஹவுரா-மும்பை மெயில் மீது மோதியதால் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஹவுரா-திடல்கர்-கண்டபஞ்சி எக்ஸ்பிரஸ், காரக்பூர்-ஜார்கிராம்-தன்பாத் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பார்பில்-ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், டாடாநகர்-இத்வாரி எக்ஸ்பிரஸ் மற்றும் எல்டிடி-எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஐந்து ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்தது. தொடர்ந்து அவசர  உதவி எண்களையும் வழங்கியது

மும்பை ஹெல்ப்லைன்: 022-22694040; நாக்பூர் உதவி எண்: 7757912790; புசாவல் உதவி எண்: 08799982712.

முன்னதாக ஜூலை 18 அன்று, உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் திப்ருகர் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.